தந்தையைின் சடலத்திடம் ஆசி பெற்று தேர்வு எழுதச்சென்ற மாணவன்; சோகத்தில் மூழ்கிய கிராமம்

By Velmurugan s  |  First Published Mar 28, 2023, 10:36 AM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தந்தை உயிரிழந்த நிலையில், 12ம் வகுப்பு மாணவன் தேர்வு எழுதிவிட்டு வந்து இறுதிச் சடங்குகளை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில்  12ம்  வகுப்பு படித்து வருகிறார் மாணவர் ரிபாஸ் ஆண்டனி. தற்போது தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொது தேர்வு நடந்து வருகிறது. இந்த பொது தேர்வை ரிபாஸ் ஆண்டனியும் எழுதி வருகிறார். 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில்  ரிபாஸ் ஆண்டனியின் தந்தை எட்வர்ட் கென்னடி பாபு உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் தனது தந்தையின் சடலத்தை வீட்டில் வைத்து விட்டு அவரிடம் ஆசி பெற்றுவிட்டு 12ம் வகுப்பு பொது தேர்வை காலையில் சென்று எழுதி வந்த மாணவன், மாலையில் தந்தையின் சடலத்திற்கு மகன் என்ற முறையில் இறுதிச் சடங்குகளைச் செய்தார். 

கடும் சோகத்தில் பொது தேர்வு எழுதிவிட்டு தந்தையின் சடலத்தை சுமந்து சென்ற நிகழ்வு கொடைக்கானலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை ஓட ஓட வெட்டிய தாய், தந்தை கைது

click me!