பழனி கோவிலுக்கு வந்த பக்தர் திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு; கோவில் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Apr 10, 2023, 2:51 PM IST

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி  கோவிலுக்கு கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், மனைவி அனிதா மற்றும் பெண் குழந்தையுடன், பழனியை சேர்ந்த உறவினர்களுடன் கோவிலுக்கு வந்துள்ளார். மலை அடிவாரத்தில் முடி காணிக்கை செலுத்தி விட்டு படி வழியாக மலைக்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது மலை உச்சியை அடையும் முன், விநாயகர் கோவில் முன்புறம் ஜெயசந்திரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார்.

அப்போது அருகில் இருந்த திருக்கோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மருத்துவர்கள் இல்லாததால் அரை மணி நேரத்திற்கு மேலாக நோயாளி காக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காமல் பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்காக ரோப் கார் மூலமாக திருக்கோவில் ஆம்புலன்சில் அனுப்பி வைத்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

சித்திரை திருவிழாவுக்கான முகூர்த்தக்கால்  நடப்பட்டது; 5ம் தேதி ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

கோவில் ஆம்புலன்சில் வெண்டி லெட்டர் வசதி இல்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து ஜெயச்சந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்தவமனைக்கு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்

இதனால் உறவினர்கள் சரியான நேரத்தில் திருக்கோவில் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததும், திருக்கோவில் ஆம்புலன்ஸில் வெண்டிலேட்டர் வசதி இல்லாததாலும் நோயாளி உயிரிழந்ததாக குற்றம் சாட்டினர். இதே போல அடிக்கடி உயிரிழப்பு ஏற்படும் நிலையில் கோவில் நிர்வாகம் மலைக்கோவிலில் நிரந்தரமாக மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டுமெனவும், நவீன வசதிகளுடன் கூடிய வகையில்  ஆம்புலன்ஸ்கள் வாங்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

click me!