ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலை சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் தங்களது வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பிய போது டம்டம் பாறை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் தலை கீழாக கவிழ்ந்துக்குள்ளானதில் ஏழு பேர் படுகாயம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தினம்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்களில் வருவது வழக்கம்.
undefined
இந்நிலையில் ஆந்திரா மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். கொடைக்கானலில் சுற்றுலா தலங்களை பார்வையிட்டு விட்டு மீண்டும் கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு வழியாக வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
20 ஆயிரம் பேருக்கு 1 கழிவறையா? மதுரை பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த மத்திய குழு
அப்போது வாகனம் டம்டம் பாறை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்து 108 ஆம்புலன்ஸ்க்கும் தெரிவித்து விட்டு படுகாயம் அடைந்த நபர்களை உடனடியாக தேனி கானா விளக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீண்டும் பழைய பார்முக்கு திரும்பும் அரிசி கொம்பன்; வீடியோ வெளியிட்டு வனத்துறை மகிழ்ச்சி