10 பைசா நாணயத்திற்கு வந்தது யோகம்..! அடித்து பிடித்து தேடும் பொதுமக்கள்..!

திண்டுக்கல்லில் பழைய 10 பைசா நாணயத்திற்கு 150 ரூபாய் டீ ஷர்ட் வழங்குவதாக அறிவிக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் திரண்டது.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் திண்டுக்கல்லில் இருக்கும் ஒரு கடையில் பழைய 5 பைசா நாணயம் கொண்டு வந்தால் 1/2 பிளேட் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் 5 பைசா நாணயத்தை தேடிப்பிடித்த பொதுமக்கள் அதை கடையில் கொடுத்து பிரியாணியை ருசி பார்த்தனர்.

Latest Videos

இந்தநிலையில் அதே பணியில் தற்போது திண்டுக்கல்லில் இருக்கும் ஒரு கடையில் 10 பைசா நாணயம் கொண்டு வந்தால் 150 ரூபாய் மதிப்பிலான டீ ஷர்ட் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த அந்த பகுதியினர் பெருமளவில் கடையில் திரண்டனர். அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்ற அவர்கள் பழைய 10 பைசா நாணயத்தை கொடுத்து டீ ஷர்ட் பெற்று சென்றனர். வரிசையில் நின்ற 200 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பஞ்சராகி நின்ற லாரி மீது பயங்கரமாக மோதிய மற்றொரு லாரி..! பலத்த காயமடைந்து கிளீனர் பலி..!

தமிழகத்தில் இருக்கும் பல்வேறு இடங்களில் பழைய நாணயங்களை மீட்டெடுக்கும் வகையில் கடைகளில் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன. பழைய நினைவுகளை புதுப்பிக்கும் விதமாக இவை செய்யப்படுவதாக கடை உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: 

click me!