கொடைக்கானலில் 107 வயது முதியவர் ஒருவர் இப்போதும் உழைத்து வாழ்ந்து வருகிறார். அவருக்கான வாரிசுகள் மட்டுமே 70 பேர் இருக்கின்றனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் தேவராஜன். 1912 ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது வயது 107 . இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வசித்து வருகிறார்.
undefined
இவருக்கு அந்தோணியம்மாள் என்கிற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 7 ஆண் குழந்தைகளும் 7 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்கள் வழியே வந்த பேர குழந்தைகள் 38 பேர் உள்ளனர். அவர்களின் குழந்தைகள் 18 பேர் கொள்ளு பேரக்குழந்தைகளாக இருக்கின்றனர். மொத்தமாக தேவராஜனுக்கு 70 வாரிசுகள் உள்ளனர்.
107 வயது ஆனபோதிலும் இப்போதும் தேவராஜன் சொந்தமாக உழைத்து வாழ்ந்து வருகிறார். அங்கிருக்கும் பள்ளி ஒன்றில் சமையல் மேற்பார்வையாளராக இருக்கும் அவர் தினமும் காலை 4 மணிக்கே எழுந்து 2 கிலோமீட்டர் நடைபயணம் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
தள்ளாத வயதிலும் அவரின் ஆரோக்கியமான வாழ்க்கை குறித்து கூறிய அவர்,எப்போதும் அசைவ உணவுகளை தவிர்ப்பதாகவும், சிறு வயது முதலே அதிகாலை 4 மணிக்கு எழுவதை பழக்கமாக வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
40 வயதிலேயே பலருக்கு வேலை செய்ய முடியாமல் போகும் நிலையில் , 107 வயதிலும் உழைத்து வாழும் முதியவர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.