தர்மபுரி அருகே ஆடிப்பெருக்கிற்காக மாமியார் வீட்டிற்கு சென்ற புதுமாப்பிள்ளை மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தர்மபுரி அருகே ஆடிப்பெருக்கிற்காக மாமியார் வீட்டிற்கு சென்ற புதுமாப்பிள்ளை மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பனைகாணள்ளியைச் சேர்ந்தவர் காமராஜ் இவரது மகன் புகழேந்தி (28). இவர் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கும் ஓசூர் அருகே உள்ள அத்துகானஹள்ளியைச் சேர்ந்த நாகராஜ் மகள் கவுதமி(23) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த சில வாரங்களில் புகழேந்தி வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் கவுதமி தனது தாய் வீட்டில் இருந்து வந்தார். இன்று ஆடி 18 பண்டிகைக்காக விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த புகழேந்தி மாமியார் வீட்டிற்கு விருந்துக்காக நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார். அப்போது, மகேந்திரமங்கலம் அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த புகழேந்திர இரண்டு கால்கள் மீது சக்கரம் ஏறி இறங்கியதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் புகழேந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றன். திருமணமான ஒரே மாதத்தில் கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.