அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் காவல் நிலையில் காவலர் ராஜசேகர் (26) மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் காவல் நிலையில் காவலர் ராஜசேகர் (26) மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் கடந்த 2018ம் ஆண்டு முதல் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். கடந்த ஆண்டு முதல் அவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், மருத்துவ விடுப்பு எடுத்து சொந்த ஊருக்குச் சென்ற காவலர் ராஜசேகர், விபத்தில் படுகாயமடைந்த தனது நெருங்கிய உறவினரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அழைத்து வந்தார். உறவினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில் காவலர் ராஜசேகர் நடந்து சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் ராஜசேகர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.