பெண்ணை கடித்துக் கொன்ற பாம்பு... அதே இடத்திற்கு வந்து உயிரை விட்டு அதிர்ச்சி..!

By Thiraviaraj RM  |  First Published Jul 10, 2021, 10:47 AM IST

இந்த மூட்டைகளுக்கு இடையில் ஒரு நல்ல பாம்பு வந்து சில நாட்களாக தங்கியுள்ளது. இதனை யாரும் கவனிக்கவில்லை. 


தர்மபுரி அருகே பெண்ணை கடித்துக் கொன்ற அதே இடத்திலேயே வந்து நல்லபாம்பு உயிரை விட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி செல்வராணி. பெருமாள் விவசாய பணிகளுக்காக தன் வீட்டில் உர மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார். வெகுநாட்களாக அடுக்கி வைத்து இருந்ததால், இந்த மூட்டைகளுக்கு இடையில் ஒரு நல்ல பாம்பு வந்து சில நாட்களாக தங்கியுள்ளது. இதனை யாரும் கவனிக்கவில்லை. கடந்த 20ஆம் தேதியன்று அந்த மூட்டைகளுக்கு அருகில் சென்று சுத்தம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது செல்வராணியை அந்த நல்ல பாம்பு கடித்து விட்டது.

Tap to resize

Latest Videos


 
பாம்பு கடித்ததில் செல்வராணி அலறித்துடித்துள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வந்ததும், விரைந்து ஓடி புதருக்குள் பாம்பு மறைந்து விட்டது. செல்வராணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே சிகிச்சை பலனின்றி செல்வராணி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

செல்வராணி இறந்த எட்டு நாட்களுக்குப் பின்னர் உறவினர்களிடம் போலீசார் நின்று விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். விசாரணையில் ஈடுபட்டிருந்தபோது புதருக்குள் சென்று மறைந்த அந்த நல்ல பாம்பு வெளியே வந்து வீட்டிற்குள் சென்று இருக்கிறது. இதை பார்த்துவிட்ட எல்லோரும் கம்பு எடுத்து அடிக்க தயாராகிவிட்டனர். பாம்பு உர மூட்டைகளுக்குள் சென்று நுழைய முற்பட்டபோது செல்வராணியை கடித்த அதே இடத்திற்கு சென்று அந்த இடத்தைவிட்டு நகர முற்பட்டபோது, அடித்துக் கொன்றனர்.

click me!