பணியிட மற்றத்தால் மனஉலைச்சல்! - நெல்லிக்குப்பம் பெண் உதவி காவல் ஆய்வாளர் தற்கொலை முயற்சி!

Published : Jun 06, 2023, 10:05 AM IST
பணியிட மற்றத்தால் மனஉலைச்சல்! - நெல்லிக்குப்பம்  பெண் உதவி காவல் ஆய்வாளர் தற்கொலை முயற்சி!

சுருக்கம்

நெல்லிக்குப்பம் காவல்நிலைய பெண் உதவி காவல் ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சுகன்யா. இந்நிலையில் இன்று திடீரென விழுப்புரம் காவலர் பயிற்சி பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் . பணியிட மாற்றம் செய்ததற்கான காரணத்தை கேட்ட நிலையில் காரணம் தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடுமையான மன உலைச்சளுக்கு ஆளான சுகன்யா காவல் நிலையத்தில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. சுகன்யா தற்பொழுது புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உதவி காவல் ஆய்வாளர் சுகன்யா மீது ஒரு வாரத்திற்கு முன்பு புகார் வந்துள்ளதாக தெரிய வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஓயாத அடை மழை! வீட்டின் சுவர் இடிந்தது! பறிபோன தாய் மகள் உயிர்! கண் கலங்கிய அமைச்சர்!
தேர்தல் முன்விரோத தகராறு கொ* வழக்கு: 9 பேரின் வாழ்க்கையை மாற்றிய தீர்ப்பு! கதறும் குடும்பம்!