கடலூர் அருகே இருசக்கர வாகனம் மீது .அமைச்சர் பொன்முடி கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியது. தற்போது திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகளை கடந்து 3ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அவ்வப்போது திமுக அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்குவது உண்டு.
அமைச்சர் பொன்முடியும் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வாடிக்கை. தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமைச்சர் பொன்முடி. இந்த நிலையில், கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகேயுள்ள காராமணிக்குப்பத்தில் இருசக்கர வாகனம் மீது அமைச்சர் பொன்முடி வாகனம் மோதி விபத்துக்குள் சிக்கியது.
இந்த விபத்தில் சிக்கிய நபரை அமைச்சர் பொன்முடியின் பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க..கடைசி 3 அஸ்திரங்கள்! டிடிவி தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பில் அவரும் இருந்தாரு.! அடேங்கப்பா.! என்ன நடந்தது?