ஸ்பண்டனா பக்கத்து அறையில் தங்கியிருக்கும் தனது தோழி தரணியாவை சந்தித்து பேசி விட்டு விடுதி அறைக்கு சென்றார். நேற்று மதியம் 3.30 மணி வரை ஸ்பண்டனா தங்கியிருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த மாணவிகள் மற்றும் விடுதி வார்டன் ஸ்பண்டனா தங்கியிருந்த அறை கதவை தட்டிப்பார்த்தும் திறக்கப்படவில்லை.
மருத்துவக் கல்லூரி விடுதியில் மருத்துவ கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ராமச்சந்திராபுரம்மேடக் அசோக்நகரை சேர்ந்தவர் சத்தியநாராயணா. இவரது மகள் ஸ்பண்டனா (30). இவர் வில்லியனூர் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி முதுகலை மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஸ்பண்டனா சொந்த ஊருக்கு சென்ற போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு திரும்பினார். கல்லூரிக்கு வந்ததில் இருந்தே ஸ்பண்டனா சோர்வாக இருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஸ்பண்டனா பக்கத்து அறையில் தங்கியிருக்கும் தனது தோழி தரணியாவை சந்தித்து பேசி விட்டு விடுதி அறைக்கு சென்றார். நேற்று மதியம் 3.30 மணி வரை ஸ்பண்டனா தங்கியிருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த மாணவிகள் மற்றும் விடுதி வார்டன் ஸ்பண்டனா தங்கியிருந்த அறை கதவை தட்டிப்பார்த்தும் திறக்கப்படவில்லை.
இதையடுத்து அறை கதவை உடைத்து பார்த்த போது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனை கண்ட சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஸ்பண்டனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கத்தியால் கழுத்து மற்றும் கையை அறுத்துள்ளது தெரியவந்தது. மேலும், இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.