மறுபுறம் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையமும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தலில் பணப்பட்டுவாடாவாவை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திருமாவளவன் தேர்தல் பணியை முன்னிட்டு சிதம்பரம் புறவழிச்சாலையில் தங்கி இருந்த வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 543 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக 39 மக்களவைத் தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் வரும் 17ம் தேதி மாலையுடன் நிறைவு பெறுவதால் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லையில் நயினார் நாகேந்திரன் காரில் சல்லடை போட்டு தேடிய பறக்கும் படை அதிகாரிகள்
மறுபுறம் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையமும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தலில் பணப்பட்டுவாடாவாவை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வருமான வரித்துறை அதிகாரிகளும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வீட்டிலும் அவ்வப்போது சோதனை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க மனம் இல்லாத ஸ்டாலின்.. தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- வானதி
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான திருமாவளவன் தேர்தல் பணியை முன்னிட்டு சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள நடேசன் நகரில் தங்கி இருந்த வீட்டில் வருமானவரித்துறையினர் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர். ஆனால், இந்த சோதனையில் ஆவணங்கள் மற்றும் ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது.