கடலுார் மாவட்டம் அடுத்த கெங்கநாயக்கன் குப்பத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் விமல்ராஜ் (25). தனியார் மொபைல் நெட்வொர்க் நிறுவனத்தில் பைபர் கேபிள் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 8 நாட்களுக்கு முன் சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்த ரவீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
திருமணமான 8 நாட்களில் மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டம் அடுத்த கெங்கநாயக்கன் குப்பத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் விமல்ராஜ் (25). தனியார் மொபைல் நெட்வொர்க் நிறுவனத்தில் பைபர் கேபிள் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 8 நாட்களுக்கு முன் சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்த ரவீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
இதையும் படிங்க;- பட்டா, சிட்டா விவரங்களை ஆன்லைனிலேயே எளிதாக தெரிந்து கொள்ளலாம்.. எப்படி தெரியுமா?
இந்நிலையில், நேற்று காலை திருப்பாதிபுலியூரில் செல்போன் கேபிளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத மேலே சென்ற மின் கம்பி உரசியதில் மாடியில் இருந்து விமல்ராஜ் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கடலுார் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க;- தாலி கட்டிய மனைவி செய்யுற வேலையா இது.. உல்லாசத்துக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து என்ன செய்தார் தெரியுமா?
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 8 நாட்களே ஆன நிலையில் கணவர் உயிரிழந்த செய்தியை கேட்டு மனைவி நெஞ்சில் அடித்து கொண்டு கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு.. வீடு புகுந்து பாஜக நிர்வாகியை அலேக்கா தூக்கிய போலீஸ்..!