தலைக்கேறிய போதையுடன் வகுப்பறையில் மாணவர்கள் கலாட்டா..! அதிர்ச்சியடைந்த ஆசிரியர்..!

Published : Nov 09, 2019, 03:44 PM ISTUpdated : Nov 09, 2019, 03:47 PM IST
தலைக்கேறிய போதையுடன் வகுப்பறையில் மாணவர்கள் கலாட்டா..! அதிர்ச்சியடைந்த ஆசிரியர்..!

சுருக்கம்

கடலூர் அருகே மது போதையில் வகுப்பறையில் கலாட்டா செய்த இரண்டு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காந்தி சாலையில் அரசு மேல்நிலைய பள்ளி இருக்கிறது. பிளஸ் 2 வரை இருக்கும் இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். நேற்று வழக்கம் போல மாணவ மாணவிகள் வகுப்பறையில் இருந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்தனர்.

இதனிடையே பிளஸ் 2 வகுப்பில் மாணவர்கள் ராஜா,கார்த்தி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரண்டு பேர் அதிகமாக சத்தம் போட்டு கலாட்டா செய்து கொண்டிருந்தனர். அப்போது வகுப்பில் ஆசிரியர்கள் யாரும் என்று தெரிகிறது. இதனால் பக்கத்து வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் இரண்டு மாணவர்களையும் கண்டித்திருக்கிறார். அப்போது தான் அவர்கள் இருவரும் மது போதையில் இருப்பது தெரியவந்தது.

குடித்து விட்டு வகுப்பு வந்த நிலையில் போதை தலைக்கேறி இரண்டு மாணவர்களும் சத்தம் போட்டுள்ளனர். அதைக்கண்ட ஆசிரியர் அதிர்ச்சியடைந்து  தலைமை ஆசிரியரிடம் அவர்களை அழைத்துச் சென்றார். மாணவர்களை கண்டித்த தலைமை ஆசிரியர் மாவட்ட கல்வி அலுவலருக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார். விரைந்த வந்த காவலர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் இருவரையும் 7 நாட்கள் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்து தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஓயாத அடை மழை! வீட்டின் சுவர் இடிந்தது! பறிபோன தாய் மகள் உயிர்! கண் கலங்கிய அமைச்சர்!
தேர்தல் முன்விரோத தகராறு கொ* வழக்கு: 9 பேரின் வாழ்க்கையை மாற்றிய தீர்ப்பு! கதறும் குடும்பம்!