ரயில் முன் பாய்ந்த மகன்... அதிர்ச்சியில் தாய் தற்கொலை..!

Published : Feb 28, 2019, 05:17 PM IST
ரயில் முன் பாய்ந்த மகன்... அதிர்ச்சியில் தாய் தற்கொலை..!

சுருக்கம்

கடலூர் அருகே மகன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியடைந்த தாய், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கடலூர் அருகே மகன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியடைந்த தாய், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கடலூரை அடுத்த காரைக்காடு அங்காளம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் காத்தவராயன்(வயது 45) தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி(40). இவர்களது மகன் விக்னேஷ் (20). இவர் கடலூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாண்டு படித்து வருகிறார். கல்லூரியில் தேர்வு எழுத பணம் தருமாறு தாய் ராஜலட்சுமியிடம் கேட்டுள்ளார். ஏ.டி.எம்.கார்டை கொடுத்து பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். ஆனால் ஏ.டி.எம். கார்டில் போதுமான பணம் இல்லை. ஆகையால் உடனே வீட்டுக்கு வந்து மகன் தாயிடம் வாக்குவாதம் செய்துவிட்டு வீட்டை விட்டு விக்னேஷ் வெளியே சென்றார். 

பின்னர் நேற்று காலை கேப்பர் குவாரி ரயில் நிலையம் அருகே சென்றிக்கொண்டிருந்த போது அப்போது அவ்வழியாக சென்ற மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அவரது தாய் ராஜலட்சுமிக்கும் தெரியவந்தது.

 

மகன் ரயில் முன் பாய்ந்து இறந்த தகவல் அறிந்ததும் கதறி அழுது துடித்தார். பின்னர் வீட்டுக்குள் சென்ற அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஓயாத அடை மழை! வீட்டின் சுவர் இடிந்தது! பறிபோன தாய் மகள் உயிர்! கண் கலங்கிய அமைச்சர்!
தேர்தல் முன்விரோத தகராறு கொ* வழக்கு: 9 பேரின் வாழ்க்கையை மாற்றிய தீர்ப்பு! கதறும் குடும்பம்!