அதிர்ச்சி.. கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா.. பள்ளி இழுத்து மூடல்..!

Published : Sep 06, 2021, 10:34 AM IST
அதிர்ச்சி.. கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா.. பள்ளி இழுத்து மூடல்..!

சுருக்கம்

 கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் 33 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 9ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு எந்த அறிகுறி இல்லாத நிலையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கோவை சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு அறிகுறி இல்லாத நிலையில் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்து வந்ததையடுத்து செப்டம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த வேண்டும், வகுப்பறையில் 20 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. பள்ளி வளாகங்களிலும் முழுமையான சுத்தமாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை தருகின்றனர். 

இந்நிலையில், கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் 33 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 9ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு எந்த அறிகுறி இல்லாத நிலையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட உள்ளதால்  சுல்தான்பேட்டை அரசு பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், புதுக்கோட்டை  மாவட்டம் முள்ளங்குறிச்சி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நாமக்கல், அரியலூர், தஞ்சை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் மீண்டும் பள்ளிகளை மூடும் சூழல் உருவாகியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Coimbatore Crime: கோவையில் நடந்த கொடூரம்.. தந்தையிடம் கதறிய குழந்தை.. 32 வயது திவ்யா.. ஆண் நண்பருக்காக இப்படியா?
Coimbatore Rain: கோவை மட்டுமல்ல இந்த 4 மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடப்போகும் கனமழை.. வானிலை மையம் வார்னிங்