இதுதான் உண்மையான லவ்.. காதலி உயிரிழந்த விரக்தி.. தனது பிறந்த நாளில் உயிரை மாய்த்துக்கொண்ட காதலன்..!

Published : Sep 05, 2021, 07:39 PM IST
இதுதான் உண்மையான லவ்.. காதலி உயிரிழந்த விரக்தி.. தனது பிறந்த நாளில் உயிரை மாய்த்துக்கொண்ட காதலன்..!

சுருக்கம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரம் 4வது வீதியை சேர்ந்தவர் பூபேஸ் (23). லாரிகளில் ஸ்டிக்கர் ஓட்டும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 8 வருடங்களாக தன்னோடு படித்த மாணவி ஒருவரை காதலித்து வந்தார். இந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, பெற்றோர் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். 

காதலி உயிரிழந்த விரக்தியில் இருந்த வாலிபர் தனது பிறந்த நாளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரம் 4வது வீதியை சேர்ந்தவர் பூபேஸ் (23). லாரிகளில் ஸ்டிக்கர் ஓட்டும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 8 வருடங்களாக தன்னோடு படித்த மாணவி ஒருவரை காதலித்து வந்தார். இந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, பெற்றோர் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். 

இதனால், மனவேதனையில் இருந்த அந்த பெண் கடந்த மாதம் 16-ம் தேதி சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பூபேசும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். 

வீடு வந்த அவர் தனது காதலியை நினைத்து மறக்க முடியாமல் மனவேதனையுடன் இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று பிறந்த நாள் வந்தது. பிறந்த நாள் கொண்டாட தனது காதலி உடனில்லை என விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  பூபேஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

சித்தப்பா சொல்லி.! கோவையில் 26 வயது இந்திராணியும் 41 வயது நபரும்! வசமாக சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
ஒரே நேரத்தில் 13 அரசு ஊழியர்கள் வீடுகளில் கொள்ளை! வடமாநில குற்றவாளிக்கு சரியான ஆப்பு வைத்த கோவை போலீஸ்