சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. திடீர் மாரடைப்பு.. இளம் சிஆர்பிஎப் வீரர் துடிதுடித்து உயிரிழப்பு..!

By vinoth kumar  |  First Published Jan 26, 2024, 2:53 PM IST

சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலராக ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜட் கட்டோச் (29) பணியாற்றி வருகிறார். உடற்பயிற்சி ஆலோசகராகவும் இருந்து வருகிறார். 


சென்னையில் சிஆர்பிஎப் வீரர் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலராக இமாச்சல் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜட் கட்டோச் (29) பணியாற்றி வருகிறார். உடற்பயிற்சி ஆலோசகராகவும் இருந்து வருகிறார். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு சீமா தேவி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தற்போது. சிஆர்பிஎப் வளாகத்தில் காவலர்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி; ஆத்திரத்தில் தன் வீட்டுக்கு தீ வைத்த கணவன்

இந்நிலையில், நேற்று பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக போலீசார் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் அதிகளவில் மாரடைப்பால் உயிரிழப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. 

இதையும் படிங்க;- இலங்கையில் இருந்து பவதாரிணி உடல் சென்னைக்கு எப்போது வருகிறது? வெளியான தகவல்..!

click me!