சென்னையில் நடைபெற்ற 75வது குடியரசு தின விழாவில் பள்ளி கல்லூரி மாணவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை ராணி மேரி கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சோகா இகேதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் கிராமிய பாடலுக்கு நடனம் ஆடினர்.
சென்னையில் நடைப்பெற்ற குடியரசு தின விழாவில் பள்ளி கல்லூரி ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் கண்கவர் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
75வது குடியரசு தினத்தையோட்டி சென்னை கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றினார். இதனை தொடர்ந்து அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். பின்னர், பள்ளி கல்லூரி மாணவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
undefined
இதையும் படிங்க;- குடியரசு தினவிழா.. யார் யாருக்கு என்ன விருது? தமிழ்நாட்டில் சிறந்த 3 காவல் நிலையங்கள் எவை? முழு விவரம் இதோ.!
சென்னை ராணி மேரி கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சோகா இகேதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் கிராமிய பாடலுக்கு நடனம் ஆடினர். அதேபோல் சென்னை சூளைமேட்டில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பூரில் உள்ள லூர்து மகளிர் மேல்நிலைப்பள்ளி, அண்ணா நகரில் உள்ள வள்ளியம்மாள் மகளிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவிகள் கிராமிய பாடலுக்கு நடனம் ஆடினர்.
அதனைத் தொடர்ந்து ஒடிசா மாநிலத்தின் சாம்பல் புரி நடனம், கர்நாடக பழங்குடியினர் நடனமான சித்தி நடனம், மணிப்பூர் மாநிலத்தின் லாய் ஹரேபா நடனம், மதுரை மாவட்டம் தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையத்தின் புகழ்பெற்ற கை சிலம்பாட்டம் கரகாட்டம் நையாண்டி மேளம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. பள்ளி கல்லூரி மாணவர்களின் நடனம் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இதையும் படிங்க;- தன்னை நம்பும் சமூகத்தை திமுகவிடம் அடகு வைத்துவிட்டார் திருமாவளவன்.. அண்ணாமலை விளாசல்.!
நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பாக நடனம் ஆடிய சென்னை ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்கு முதல் பரிசும், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுக்கு இரண்டாம் பரிசும், சோகா இகேதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு மூன்றாம் பரிசும் அறிவிக்கப்பட்டது. சிறப்பாக நடனம் ஆடிய சென்னை சூளைமேடு ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு முதல் பரிசும், சென்னை பெரம்பூர் லூர்து மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு இரண்டாம் பரிசும், சென்னை அண்ணா நகர் வள்ளியம்மாள் மகளிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மூன்றாம் பரிசும் அறிவிக்கப்பட்டது.