சென்னை மேற்கு தாம்பரம் ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் (33).தனது குழந்தைகளுக்கு முடிச்சூர் சாலையில் உள்ள ஆலிப் பிரியாணி கடையில் இருந்து செட்டிநாடு சிக்கன் பார்சலாக வாங்கி சென்றுள்ளார்.
சென்னை அருகே குழந்தைகளுக்கு வாங்கிச் சென்ற செட்டிநாடு சிக்கன் கிரேவியில் புழுக்கள் இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
சென்னை மேற்கு தாம்பரம் ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் (33). இருசக்கர வாகன மெக்கானி கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது குழந்தைகளுக்கு முடிச்சூர் சாலையில் உள்ள ஆலிப் பிரியாணி கடையில் இருந்து செட்டிநாடு சிக்கன் பார்சலாக வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்க்கு சென்று பார்சலை திறந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென சிக்கனில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பார்சலை மீண்டும் கடைக்கு எடுத்து சென்று உணவக உரிமையாளரிடம் காட்டியுள்ளார். அப்போது தங்களுக்கு இதுக்கும் எந்த வித சம்பதமும் இல்லை என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: Tamilnadu Rain:அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 3 மாவட்டங்களில் தரமான சம்பவம் இருக்காம்! வானிலை மையம் அலர்ட் மெசேஜ்!
மேலும் சூடாக கொடுக்கப்பட்ட செட்டிநாடு சிக்கனில் உயிரோடு எப்படி புழு வரும் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சௌந்தர்ராஜன் தாம்பரம் மாநகராட்சி உணப்பு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் உணவகத்தின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து சமூக ஆர்வலர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து உணவகத்தை முற்றுகையிட்டு உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் போதை ஊசி செலுத்திக்கொண்ட இளைஞர் துடிதுடித்து பலி!
இந்நிலையில் தங்களது உணவகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் இது போன்று பொய்யான செய்தியை பரப்புவதாக பிரியாணி கடை உரிமையாளர் கமால் பாஷா தெரிவித்தார்.