சென்னையில் நிலைமை மோசமாக இருக்கு.. 10,000 படுக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்.. மாநகராட்சி ஆணையர் தகவல்..!

By vinoth kumarFirst Published Apr 21, 2021, 12:25 PM IST
Highlights

தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஓட்டல்களில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். 

தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஓட்டல்களில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். 

சென்னை, தரமணியில் 900 படுக்கைகள் கொண்ட 13-வது கொரோனா பாதுகாப்பு மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- 28,005 பேர் தற்போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகள், கோவிட் கேர் சென்டர்களில் சிகிச்சை பெற்று குணமடைவோரின் பெயர்களைப் பட்டியலில் இருந்து எடுத்துவிடுவோம். வீட்டுத் தனிமையில் உள்ளவர்களின் பெயர்களை 10 நாட்கள் கழித்து தானாகவே நாங்கள் எடுத்துவிடுவோம்.

தனிமைப்படுத்துதல், வீட்டுக்கு வீடு சர்வே ஆகியவற்றை இன்னும் தீவிரப்படுத்த உள்ளோம். மறுபடியும் மக்கள் தடுப்பூசியை வேகமாக எடுத்துக்கொள்கின்றனர். கொரோனா தடுப்பூசி 100% பாதுகாப்பானது. 13-14 லட்சம் பேருக்கு மேல் இதுவரை தடுப்பூசி செலுத்தியிருக்கின்றனர். சென்னைக்கு மட்டும் 2 லட்சம் தடுப்பு மருந்துகளைப் பொது சுகாதாரத்துறை வழங்கியுள்ளது. தினமும் தடுப்பு மருந்துகள் வந்துகொண்டிருக்கின்றன.

மே 1-ம் தேதியிலிருந்து 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். அப்போது இன்னும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது இன்னும் வேகமெடுக்கும். கொரோனா தடுப்பூசி அறிவியல் ரீதியில் பாதுகாப்பானது. தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஓட்டல்களில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 30 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கூடுதலாக 10,000 படுக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்துள்ளார்.

click me!