#BREAKING கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம்.. பாதிப்பும், உயிரிழப்பும் புதிய உச்சம்..!

By vinoth kumarFirst Published Apr 20, 2021, 6:28 PM IST
Highlights

தமிழகத்தில் ஒரேநாளில் 10,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 50ஐ நெருங்கியுள்ளது. 

தமிழகத்தில் ஒரேநாளில் 10,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 50ஐ நெருங்கியுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 24 மணிநேரத்தில் 10,986 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,13,378ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 3வது நாளாக 3,711 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,90,364ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மட்டும் 1,01,329 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 2,14,00,549 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில் 6,689 பேர் ஆண்கள் 4,297 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 6,11,836 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 4,01,506 ஆகவும் உள்ளது.

இன்று மட்டும் 6,250 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,20,369ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 48 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 22 பேரும், தனியார் மருத்துவமனையில் 26 பேரும் உயிரிழந்தனர். இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,205ஆக அதிகரித்துள்ளது. தற்போது 79,804 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

click me!