#BREAKING தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் ஓடுமா? ஓடாதா? மாறுபட்ட கருத்தால் குழப்பம்..!

By vinoth kumarFirst Published Apr 20, 2021, 2:55 PM IST
Highlights

நாளை முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது என ஒரு சங்கமும், ஓடும் என மற்றொருசங்கமும் அறிவித்துள்ளதால்  பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

நாளை முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது என ஒரு சங்கமும், ஓடும் என மற்றொருசங்கமும் அறிவித்துள்ளதால்  பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 10,000ஐ தாண்டியுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக  இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து பகலில் மட்டும் ஆம்னி பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாளை முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது. கொரோனா தொற்று பிரச்னை முடிவுக்கு வரும் வரை ஆம்னி பேருந்துகளை இயக்க மாட்டோம் என உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் அறிவித்துள்ளனர். 

இதனிடையே, ஆம்னி பேருந்துகளை பகலில் மட்டும் இயக்குவோம் என மற்றொரு உரிமையாளர் சங்க தலைவர் அஃப்சல் அறிவித்துள்ளார். காலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என கூறியுள்ளார். நாளை முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது என ஒரு சங்கமும், ஓடும் என மற்றொருசங்கமும் அறிவித்துள்ளதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

click me!