BREAKING சென்னை அதிர்ச்சி சம்பவம்.. தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை..!

Published : Apr 20, 2021, 11:19 AM IST
BREAKING சென்னை அதிர்ச்சி சம்பவம்.. தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை..!

சுருக்கம்

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனையில் கொரோனா வார்டில் நோயாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனையில் கொரோனா வார்டில் நோயாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் செட்டிநாடு தனியார் மருத்துவமனையில் கடந்த 16ம் தேதி அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் ரங்கன் (51) என்பவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், இன்று மருத்துவமனையில் 3வது மாடியில் இருந்த ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கொரோனா நோயாளியின் தற்கொலை குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!