10 லட்சம் பணம், குழந்தைகளுடன் மாயமான மனைவி..! கணவர் பரிதவிப்பு..!

Published : Jan 27, 2020, 12:58 PM ISTUpdated : Jan 27, 2020, 04:34 PM IST
10 லட்சம் பணம், குழந்தைகளுடன் மாயமான மனைவி..! கணவர் பரிதவிப்பு..!

சுருக்கம்

சென்னை அருகே நகை, பணம் மற்றும் குழந்தைகளுடன் இளம்பெண் ஒருவர் காணாமல் போயிருக்கிறார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை போரூர் மங்கள்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன்(38). இவரது மனைவி கனகலட்சுமி(30). இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அங்கிருக்கும் ஒரு பள்ளியில் மூத்த மகள் அக்சயா 6ம் வகுப்பும் இளைய மகள் மோனிஷா நான்காம் வகுப்பும் படிக்கின்றனர். கேசவன் டீ கடை வைத்து தொழில் பார்த்து வருகிறார். தினமும் அதிகாலை நான்கு மணியளவில் கடையை திறக்கும் கேசவன் இரவு 11 மணிக்கு மேல்தான் கடையை அடைத்து விட்டு செல்வார்.

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த முல்லை விவேக் என்பவருடன் கேசவனுக்கு நட்பு ஏற்பட்டது. நிலம் வாங்கி தருவதாக கேசவனிடம் விவேக் பழகி வந்துள்ளார். இதனிடையே கேசவன் கடையில் இருக்கும் சமயங்களில் விவேக் அவரது வீட்டிற்கு சென்று வந்திருக்கிறார். இதில் கனலட்சுமிக்கும் விவேக்கிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நெருங்கி பழகிய இருவரும் தொலைபேசி மூலமாகவும் தினமும் பேசி வந்துள்ளனர். இதையறிந்த கேசவன் மனைவியை கண்டித்திருக்கிறார். ஆனாலும் இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.

இந்தநிலையில் குழந்தைகள் மற்றும் 10 லட்சம் பணத்துடன் கனகலட்சுமி தற்போது மாயமாகி இருக்கிறார். அவரை கேசவன் பல இடங்களில் தேடி பார்த்தும் காணவில்லை. இதையடுத்து காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். இதனிடையே முல்லை விவேக்வுடன் தான் சென்றிருக்க கூடும் என கேசவன் சந்தேகிக்கிறார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கனகலட்சுமி மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.

Also Read: 11 வயது மகளை காமப்பசிக்கு இரையாக்க துடித்த தந்தை..! அதிர்ந்துபோன தாய்..!

PREV
click me!

Recommended Stories

போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!