
விதவைப் பெண் நுழைந்தால் கோயில் புனிதம் கெட்டு விடும் என்ற மூட நம்பிக்கை இன்னும் தமிழகத்தில் நிலவுவது துரதிருஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கெட்டிசேவியூர் கிராமத்தில் உள்ள பெரிய கருப்பராயன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரிக்காக இருந்த பொங்கியப்பன் கடந்த 2017ம் ஆண்டு இறந்துவிட்டார். இந்த கோவிலில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஆடித்திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திருவிழாவில் நானும் எனது மகனும் கலந்து கொள்ளவிருந்தோம். ஆனால், பூசாரி பொங்கியப்பனின் மனைவி தங்கமணி மற்றும் மகனை கோவிலுக்குள் நுழைய அந்த ஊரை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க;- அரைகுறை ஆடை! ஆபாச நடனம்! டபுள் மீனிங்கில் குத்தாட்டம்! பொதுமக்களுடன் சேர்ந்து வேடிக்கை பார்த்த போலீஸ்!
இதனால், விதவை என்பதால் கோவிலுக்குள் நுழையக் கூடாது என மிரட்டுவதால், கோவிலுக்குள் சென்று வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தங்கமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கணவரை இழந்தவர் என்பதால் கோயிலுக்குள் அனுமதி மறுப்பதா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், விதவை பெண் கோவிலுக்குள் நுழைந்தால் புனிதம் கெட்டு விடும் என்ற என்ற மூட நம்பிக்கைகள் தமிழகத்தில் இன்னும் நிலவுவது துரதிருஷ்டவசமானது. ஆண்கள் தங்கள் வசதிக்கேற்ப வகுத்த இந்த கோட்பாடுகள் மற்றும் விதிகளால், கணவனை இழந்ததால் பெண்ணை இழிவுபடுத்துகின்றன என குறிப்பிட்டார்.
இதையும் படிங்க;- முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!
சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாகரீக சமுதாயத்தில் இவையெல்லாம் தொடர அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, மனுதாரர் தங்கமணியும், அவரது மகனும் திருவிழா மற்றும் கடவுள் வழிபாட்டில் கலந்து கொள்வதைத் தடுக்க எவருக்கும், எந்த உரிமையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மனுதாரரை கோவிலுக்குள் நுழைய விடாமல் யாரேனும் தடுக்கும் முயற்சித்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.