உன்னோட பாய் பிரண்டு கிட்ட பேசுவதை இத்தோட நிறுத்திக்கோ.. கண்டித்த கணவர்.. மனைவி என்ன செய்தார் தெரியுமா?

Published : Jan 27, 2023, 11:47 AM IST
உன்னோட பாய் பிரண்டு கிட்ட பேசுவதை இத்தோட நிறுத்திக்கோ.. கண்டித்த கணவர்.. மனைவி என்ன செய்தார் தெரியுமா?

சுருக்கம்

சென்னை அண்ணாநகர் மூவேந்தர்நகர் 7-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி புவனேஷ்வரி(30). இவர்களுக்கு  2 குழந்தைகள் உள்ளனர். 

ஆண் நண்பரிடம் பேசுவதை கணவர் கண்டித்ததால் மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை அண்ணாநகர் மூவேந்தர்நகர் 7-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி புவனேஷ்வரி(30). இவர்களுக்கு  2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், புவனேஷ்வரிக்கு அண்ணாநகர் எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.  இதன் காரணமாக புவனேஷ்வரி அடிக்கடி ஆண் நண்பருடன் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த கணவர் சுரேஷ் ஆண் நண்பருடன் பேசுவதை நிறுத்திக் கொள்ளுமாறு மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஆண் நண்பருடன் மீண்டும் பேசி வந்துள்ளார். இதனால், கடும் கோபமடைந்த சுரேஷ் மனைவியை கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனையடுத்து, கணவர் சுரேஷ் தூங்க சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த புவனேஷ்வரி அதிகாலை வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார். புவனேஷ்வரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கணவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை போரராடி அணைதத்தார். படுகாயமடைந்த புவனேஷ்வரியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!