கொரோனா களப்பணிக்கு வராவிட்டால் ‘சஸ்பெண்ட்’... ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு போட்ட சென்னை மாநகராட்சி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 26, 2020, 2:49 PM IST
Highlights

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டுமென மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் காட்டுத்தீ போல் பரவி வரும்,கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்காக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்வது முதல் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது வரை அரசு இயந்திரம் அதிவேக நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு தமிழகம் முழுவதும் சூறாவளி வேகத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

நாளுக்கு நாள் வேகமெடுக்கும் கொரோனா பரவலை தடுப்பதற்காக ஆசிரியர்களையும் அரசு களமிறங்கியுள்ளது. பெரும்பாலான ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று  கணக்கெடுக்கும் பணியான  Street warrior பணியிலும் , மண்டல அலுவலகங்களில் செயல்படும் Tele counselling மையத்திலும் பணி செய்து வருகின்றனர். Tele counselling-மையத்தில்  தினம் காலை 8 மணியிலிருந்து 2 மணி வரையும் , பிற்பகல் 2  மணியிலிருந்து இரவு 8 மணிவரை என்று சிப்ட் முறையில் ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

கொரோனா பரவலுக்கு மத்தியில், உயிரை கையில் பிடித்துக்கொண்டு, பாதுகாப்பற்ற சூழலில்  பணியாற்ற செல்வது ஆசிரியர்கள் மத்தியில் கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தெரிவித்திருந்தது. மேலும் கொரோனா நேரத்தில் வீட்டிலிருந்த படியே செய்யும் வேலைகளை மட்டும் தங்களுக்கு ஒதுக்கும் படியும், கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட முடியாது என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். 

 

இதையும் படிங்க: அடுத்த கொரோனா மரணம்.... அதிர்ச்சியில் கோலிவுட்... பிரபல தயாரிப்பாளர் வீட்டில் நடந்த சோகம்...!

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டுமென மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் நேரடியாக கொரோனா பாதித்த பகுதிகளுக்கு சென்று, தொற்றின் நிலவரம் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அவ்வாறு கொரோனா கணக்கெடுப்பு பணிக்கு வராத மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் தங்களை கட்டாயப்படுத்தி கொரோனா களப்பணியில் ஈடுபடுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டியுள்ளனர். 

click me!