திமுகவிற்கு கலாநிதி மாறன், இந்தியா சிமெண்ட், அப்பபோலோ கொடுத்த நன்கொடை எவ்வளவு தெரியுமா.? வெளியான புதிய தகவல்

By Ajmal Khan  |  First Published Mar 18, 2024, 10:40 AM IST

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவும் 656 கோடி ரூபாய் அளவிற்கு நன்கொடையை பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6.05 கோடி நிதி பெற்றுள்ளது.அதில் திமுகவிற்கு எந்த எந்த நிறுவனங்கள் நன்கொடை வழங்கியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


தேர்தல் பத்திரம்- அரசியல் கட்சிகள்  நன்கொடை எவ்வளவு.?

அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் பல கோடி மதிப்பிற்கு நன்கொடை தேர்தல் பத்திரங்களை வழங்கியுள்ளது. பாஜக சமர்ப்பித்துள்ள ஆவணங்களின்படி, அந்தக் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6,987 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது. இந்திய அளவில் பாஜக முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரம் மூலமாக ரூ. 1,334 கோடி நிதி பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவும் 656 கோடி ரூபாய் அளவிற்கு நன்கொடையை பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6.05 கோடி நிதி பெற்றுள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. 

Latest Videos

திமுகவிற்கு நன்கொடை கொடுத்தவர்கள் யார்.?

இந்தநிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியயான திமுகவிற்கு யார் யார் எவ்வளவு கோடி கொடுத்தார்கள் என்ற  தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அந்த வகையில், 

  • லாட்டரி அதிபர் மார்ட்டின்  ஃபியூச்சர் கேமிங் அண்டு ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் 509 கோடி வழங்கி உள்ளது.
  • மேகா இன்பிராஸ்ட்ரக்சர் 105 கோடி ரூபாயை வழங்கி உள்ளது.
  • சீனிவாசன் தலைமையிலான இந்தியா சிமெண்ட்ஸ் 14 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
  • கலாநிதி மாறனின் சன் டிவி 10 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
  • திருவேணி நிறுவனம் 8 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
  • ராம்கோ சிமெண்ட் 5 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.
  • ஐ ஆர் பி 2 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.
  • எல் எம் டபிள்யூ ஒன்று புள்ளி ஐந்து கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
  • அப்போலோ ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளது
  • பிர்லா குரூப் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது

இதையும் படியுங்கள்

தேர்தல் பத்திர விவகாரம்.. திமுகவிற்கு 509 கோடி வழங்கிய லாட்டரி மார்ட்டின் - வெளியான லேட்டஸ்ட் தகவல்!

click me!