போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டார். ஜாபர் சாதிக்கிடம் மத்திய போதைப் தடுப்பு பிரிவு அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
ரூ.2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கை டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் சென்னை அழைத்து வந்துள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து கடந்த 9ம் தேதி மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். முதலில் அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஜாபர் சாதிக்கை 7 நாள் காவலில் எடுத்தும் என்சிபி விசாரணை நடத்தியது. 7 நாட்கள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
undefined
இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தியது இப்படித்தான்! வெளிச்சத்துக்கு வந்த அதிர வைக்கும் ரகசியம்! என்ட்ரி கொடுக்கப்போகும் NIA!
இந்த விசாரணையில் ஜாபர் சாதிக்கிற்கு யார் யாருடன் தொடர்பு, போதைப்பொருள் கடத்தலுக்கு உதவி செய்வது யார் என என்சிபி துருவிதுருவி விசாரணை நடத்தியது. போதைப் பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், ஹோட்டல் பிஸ்னஸில் முதலீடு செய்தது தெரியவந்தது. அந்த வகையில் ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த நெருங்கிய கூட்டாளியான சதா என்ற சதானந்தம் என்பவரை கைது செய்துள்ளது. இவர் திருச்சியிலும், சென்னையிலும் தனியார் நிறுவனத்தை நடத்தி வந்திருக்கிறார். ஆனால், இந்த நிறுவனங்கள் மூலமாக சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தி இருப்பது அம்பலமாகியுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் குடும்பத்தோடு நெருக்கம்! போதைப்பொருளை விற்ற பணத்தை திமுக நிர்வாகிகளுக்கு கொடுத்த ஜாபர் சாதிக்! இபிஎஸ்
இந்நிலையில், டெல்லியில் இருந்து ஜாபர் சாதிக் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அய்யப்பாக்கதத்தில் உள்ள மத்திய போதைப்பொருள் அலுவலகத்தில் வைத்து ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவரை இன்று முக்கிய இடங்களுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்துகின்றனர். மேலும் அவரிடம் கைப்பற்றப்பட்ட 7 செல்போன்களை ஆய்வு செய்யும் பணியும் நடக்கிறது. யார் யாரிடம் பேசியுள்ளார் என்பது குறித்து சைபர் கிரைம் தடயவியல் நிபுணர்களின் உதவியும் நாடப்பட்டுள்ளது.