வாட்டி வதைக்கும் வெயில்.. குளிர வைக்க வரும் கோடை மழை.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வானிலை மையம்!

Published : Mar 17, 2024, 02:40 PM ISTUpdated : Mar 17, 2024, 02:59 PM IST
வாட்டி வதைக்கும் வெயில்.. குளிர வைக்க வரும் கோடை மழை.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வானிலை மையம்!

சுருக்கம்

17ம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

20 மற்றும் 22ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 23ம் தேதி தமிழகம், புதுவை நிலவக்கூடும். மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

இதையும் படிங்க: School Reopen: பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு? வெளியாகப்போகும் முக்கியஅறிவிப்பு!

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

17.03.2024 மற்றும் 18.03.2024 தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

இதையும் படிங்க:  வாகன ஓட்டிகளே உஷார்.! தப்பி தவறி கூட அந்த பக்கம் போயிடாதீங்க! ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்.!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை; ஏதுமில்லை.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!