பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய தகவல்..!

By vinoth kumarFirst Published Jul 27, 2021, 10:08 AM IST
Highlights

கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு அதிக அளவில் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. மேலும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமாக தடுப்பூசியை போட்டு செல்கின்றனர். கொரோனா 3வது அலையை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைந்து தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

கொரோனா 3வது அலையை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைந்து தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் இருந்து 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தது. அதன் பின்னர் அங்கிருந்து தேனாம்பேட்டை மருந்து கிடங்கிற்கு கொண்டு வரப்பட்ட தடுப்பூசிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழகத்துக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மத்திய அரசிடமிருந்து தொடர்ந்து கேட்டு பெறப்படுகிறது. தமிழகத்திற்கு இன்னும் 4,5 நாட்களில் கூடுதல் தடுப்பூசிகள் பெறப்படும். தமிழகத்தில் இதுவரை 2.08 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தற்போது 11.36 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. 

கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு அதிக அளவில் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. மேலும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமாக தடுப்பூசியை போட்டு செல்கின்றனர். கொரோனா 3வது அலையை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைந்து தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தேவையான அளவு உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் ஆக்சிஜன் தேவையும் குறைந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக சுற்றுச்சூழல் துறை தான் முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து கொள்கை முடிவு சார்ந்த விஷயம் என்பதால் முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

click me!