ஜெயலலிதா சிகிச்சையை நேரில் பார்வையிட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு இதுவரை 6 அறிக்கைகளை அளித்துள்ளது. ஜெயலலிதா இறந்து 3 மாதங்கள் கழித்தே முதல் அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவ குழு அளித்தது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் உடல்நிலை எப்படி இருந்தது என்பதில் தொடங்கி விரிவான விசாரணை நடத்தப்பட்டுள்ளது என நீதிபதி ஆறுமுகசாமி கூறியுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி திடீரென ஜெயலலிதாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ், தீபா உள்ளிட்டோர் கூறிவந்தனர்.
இதையும் படிங்க;- காவலர்கள் தயார் நிலையில் இருங்க.. டிஜிபி சைலேந்திர பாபு திடீர் சுற்றறிக்கையால் பரபரப்பு..!
undefined
இதனையடுத்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைத்தார். பல்வேறு தரப்பிடம் விசாரணை நடத்தி ஆறுமுகசாமி ஆணையம் வாக்குமூலத்தை பெற்றது. இதுதொடர்பான அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி சமர்பித்தார்.
இதனையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நீதிபதி ஆறுமுகசாமி;- மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் உடல்நிலை எப்படி இருந்தது என்பதில் தொடங்கி விரிவான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மனுதாரர் உட்பட 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தப்பட்டது. ஆங்கிலத்தில் 500 பக்கமும், தமிழில் 608 பக்கமும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா மரண விசாரணையில் ஆணையம் எந்தவித தாமதமும் செய்யவில்லை. ஆறுமுகசாமி ஆணையம் ஒரு நீதிமன்றம் போலவே செயல்பட்டதாக உச்சநீதிமன்றம் கூறியது.
ஜெயலலிதா சிகிச்சையை நேரில் பார்வையிட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு இதுவரை 6 அறிக்கைகளை அளித்துள்ளது. ஜெயலலிதா இறந்து 3 மாதங்கள் கழித்தே முதல் அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவ குழு அளித்தது. ஒவ்வொருவரின் சாட்சியமும் அதிக பக்கங்களை கொண்டது. விசாரணையில் காலதாமதம் என்று கூறுவதை ஏற்க இயலாது. ஆணையத்தின் மீது நம்பிக்கை வைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி.
சசிகலா நேரில் வர தயாரில்லை என்று எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்ததால் அவரை நேரில் அழைக்கவில்லை. யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்க முடியாது. ஓபிஎஸ் வாக்குமூலம் அறிக்கைக்கு உதவியாக இருந்தது. அறிக்கையில் என்ன உள்ளது என்பதை நான் கூற இயலாது. 2 அரசுகளுமே முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியது. எவ்வித குறுக்கீடும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- அமைச்சர் அன்பில் மகேஷிடம் வசமாய் சிக்கிய பள்ளி மாணவர்கள்.. உடனே ஆசிரியரை கூப்பிட்டு என்ன செய்தார் தெரியுமா?