ஆசியாவில் மிக முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றாக கருதப்படுவது சென்னை ராஜூவ் காந்தி மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியாவில் மிக முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றாக கருதப்படுவது சென்னை ராஜூவ் காந்தி மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 5,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இதையும் படிங்க;- 10 ஆண்டுகளாக பாலியல் தொல்லை..6 முறை கருக்கலைப்பு..லீக் ஆன வீடியோ - அதிரடி திருப்பம் !
undefined
இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து வெளியேறினர். உடனே நோயாளிகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர். இதுதொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் நோயாளிகள், பொதுமக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க;- AC வெடித்ததில் படுக்கையிலேயே உயிரிழந்த இளைஞர்! என்னை தனியா விட்டுட்டு போயிட்டியே!நெஞ்சில் அடித்து கதறிய மனைவி