தமிழக போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை..! டிஜிபி அதிரடி உத்தரவு

Published : Jul 30, 2021, 09:40 PM ISTUpdated : Jul 30, 2021, 09:56 PM IST
தமிழக போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை..! டிஜிபி அதிரடி உத்தரவு

சுருக்கம்

போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.  

தமிழக போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை டிஜிபி  வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், போலீசார் தங்களது உடலை பேணிக்காக்க ஏதுவாகவும், தங்கள் குடும்பத்தினருடன்  நேரம் செலவிடவும் ஏதுவாக வாரத்தில் ஒருநாள் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது.

வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் போலீசாருக்கு ஒய்வு தினத்தன்று பணியில் இருக்கும் போலீசாருக்கு மிகைநேர ஊதியம் வழங்க வேண்டும்.

காவல்துறையினரின் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் போன்ற விஷேச நாட்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்த நாட்களில் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

மேற்கண்ட அறிவுரைகளை அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தவறாமல் செயல்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை
குட்நியூஸ்.. சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் அதிரடி குறைப்பு.. எப்படி பெறுவது?