இந்த கொடுமையை எங்கே போய் சொல்ல... காலையில் திருமணம்... வேறொருவருடன் ஓட்டம் பிடித்த மணமகள்..!

By vinoth kumarFirst Published Mar 3, 2021, 6:34 PM IST
Highlights

பூந்தமல்லி அருகே கடைசி நேரத்தில் மணப்பெண் வேறொருவருடன் ஓடியதால், மணமகள் வீட்டார் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டுமென மணமகன் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

பூந்தமல்லி அருகே கடைசி நேரத்தில் மணப்பெண் வேறொருவருடன் ஓடியதால், மணமகள் வீட்டார் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டுமென மணமகன் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் மதுராந்தகத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடை பெற இருந்தது. இதற்காக அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தடபுடலாக நடந்து வந்தது. 

நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் உறவினர்கள்  என பலர் மண்டபத்துக்கு வந்தனர். ஆனால், நீண்ட நேரமாகியும் மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார், மணமகள் வீட்டாரை தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது, பியூட்டி பார்லருக்கு  சென்ற மணமகளை காணவில்லை என தெரியவந்தது. 

இதனால், மணமகன் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். சிலர், ஆத்திரத்தில் அங்கு வைத்திருந்த வரவேற்பு பேனர்களை கிழித்து எரிந்தனர். மண்டபத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். திருமணம் நின்றதால் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சியுடன் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நசரத்பேட்டை காவல் நிலையத்தில் மணமகன் வீட்டார் புகார் அளித்தனர். அதில், திருமணம் நின்றதால் பெண் வீட்டார் தங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறினர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

click me!