
தமிழக சட்டமன்ற தேர்தல் எப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் விநியோகிக்கலாம் என்பதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் பெறவில்லை என சத்திய பிரமாணம் பெறக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சூரிய பகவான் தாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வாக்குப்பதிவின் போது ஒவ்வொரு வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை எனக்கூறி சத்திய பிராமாணம் வாங்க கோரிய வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களிடம் சத்தியபிரமாணம் பெறுவது சாத்தியமில்லாதது என்பதால் இதுகுறித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
மேலும் அது நீதிமன்றத்தின் பணியல்ல எனவும், இதுசம்பந்தமாக மனுதாரர் அரசை அணுகலாம் எனவும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.a