சென்னைவாசிகள் நைட்டுல உஷாரா இருங்க...!! வேலூர், விழுப்புரத்துல நிக்க வச்சி குத்தப்போகுது...!!!

By vinoth kumarFirst Published Sep 1, 2019, 5:39 PM IST
Highlights

சூறைக்காற்று  வீசக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும், கடலில் அலைகள் மேலெழும்பி ஆர்பரிக்கும் என்பதால் கரையிலிருந்து  சுமார் 400 கிலோ மீட்டருக்கு அப்பால் மீனவர்கள் யாரும்  கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது, வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதால் கடலில் சூறைகாற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்  மிதமானது முதல்  கனமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை விழுப்புரம்,  கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரையில்  வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில்  லேசானது  முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது. 

வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலுவடையக்கூடும் என்பதால் தமிழக கடற்கரை பகுதிகளில் இருந்த சுமார்  400 கிலோமீட்டருக்கு அப்பால் மணிக்கு சுமார் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று  வீசக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும், கடலில் அலைகள் மேலெழும்பி ஆர்பரிக்கும் என்பதால் கரையிலிருந்து  சுமார் 400 கிலோ மீட்டருக்கு அப்பால் மீனவர்கள் யாரும்  கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

click me!