பேராசிரியர் மாணவரிடையே பலான உறவு...! கடும் தண்டனை...!! கட்டுப்பாடு போட்டது பல்கலைகழகம்...!!

Published : Sep 01, 2019, 11:41 AM ISTUpdated : Sep 01, 2019, 12:23 PM IST
பேராசிரியர் மாணவரிடையே பலான உறவு...! கடும் தண்டனை...!!  கட்டுப்பாடு போட்டது பல்கலைகழகம்...!!

சுருக்கம்

ஆசிரியர்களின் வீடுகளுக்கு செல்லும் அவசியம் ஏற்பட்டால்,பல்கலை கழகத்தில் உரிய அனுமதி பெற்றுத்தான் மாணவர்கள் செல்லவேண்டும். அதற்கு ஆசிரியர் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தாய் தந்தை உறவைவிட மேன்மையானது ஆசிரியர் மாணவர் உறவு என்ற காலம் போய், அந்த உறவுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவிற்கு சூழல் மாறிவிட்டதே என்பது வேதனையிலும் வேதனை.

பேராசிரியர்கள் மாணவர்களிடையே பாலியல் உறவோ அல்லது தொந்தரவோ இருப்பதை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பல்கலைகழகம் எச்சரித்துள்ளது.பாலியல் தொந்தரவு அற்ற வாளாகமாக சென்னை பல்கலைகழகத்தை மாற்றும் முயற்சிதான் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

சமீபத்தில் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர் ஒருவர் மணாவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த புகாரில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார், இச்சம்பவம் கல்வித்துறைக்கே அவமானத்தை தேடித்தந்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து பல்கலைகழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கடுமையான உத்தரவுகள் பிறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை பல்கலைகழகத்தின் பதிவாளர் சீனிவாசன் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சென்னை பல்கலைகழகத்தை பாலியல் தொந்தரவு அற்ற வளாகமான மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது, அதற்காக பேராசிரியர் ரீட்டா ஜான் தலைமையில் பாதுகாப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

பேராசியர்கள் மாணவர்களை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாலோ அல்லது ஆசிரியர்கள் மாணவர்கள் என இருதரப்பிலும்  தவறுகள் நடந்தாலும்  புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  குறிப்பாக மாணவ, மாணவியரை பேராசிரியர்கள்,மற்றும் விரிவுரையாளர்கள் கல்வி தொடர்பாக  வீடுகளுக்கோ அல்லது தனிப்பட்ட இடங்களுக்கோ அழைக்கக் கூடாது என சென்னை பல்கலைகழகம் உறுதியாக தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களின் வீடுகளுக்கு செல்லும் அவசியம் ஏற்பட்டால்,பல்கலை கழகத்தில் உரிய அனுமதி பெற்றுத்தான் மாணவர்கள் செல்லவேண்டும். அதற்கு ஆசிரியர் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தாய் தந்தை உறவைவிட மேன்மையானது ஆசிரியர் மாணவர் உறவு என்ற காலம் போய், அந்த உறவுகளுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவிற்கு சூழல் மாறிவிட்டதே என்பது வேதனையிலும் வேதனை.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!