தலைநகரில் சுற்றித் திரியும் மக்கள்.. 6,67,000 ரூபாய் அபராதம் வசூல்.. அதிரடி காட்டும் போலீஸ்..!

By vinoth kumarFirst Published May 18, 2021, 7:41 PM IST
Highlights

சென்னை பெருநகரில் கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 1,521 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 2,836 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 1,521 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 2,836 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 வரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் சோதனைச்சாவடிகள் அமைத்து, சரக காவல் குழுவினர்கள் மூலம் தடையை மீறி அத்தியாவசியமின்றி வாகனங்களில் சுற்றுபவர்கள், ஒன்று கூடுபவர்கள், முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் மற்றும் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்களை கண்காணித்து உரிய சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூடுதல் ஆணையாளர்கள் (வடக்கு, தெற்கு, போக்குவரத்து) அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், சட்டம் ஒழுங்கு காவல் சார்பில் 200 இடங்களிலும், போக்குவரத்து காவல் சார்பில் 118 இடங்களிலும், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர் மூலம் வாகனத் தணிக்கை, சுற்று ரோந்து மூலம் தீவிரமாக கண்காணித்து கொரோனா தடுப்பு ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

அதன்பேரில், சென்னை பெருநகரில் நேற்று (17.05.2021) சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட தணிக்கை மற்றும் சோதனையில், போக்குவரத்து காவல் குழுவினரால் கொரோனா ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சென்றது தொடர்பாக 1,334 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 235 இருசக்கர வாகனங்கள், 9 ஆட்டோக்கள், 2 இலகுரக வாகனங்கள் உட்பட மொத்தம் 246 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் மொத்தம் பணம் ரூ.6,67,000 விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், சென்னை பெருநகரில் கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 1,521 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 2,836 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 3,619 தொடர்பாக 392 வழக்குகளும், அரசு அறிவித்த வழிகாட்டுதலை மீறி செயல்பட்ட 49 கடைகள் மூடப்பட்டு, ரூ.8,59,200  அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

click me!