உன்ன யாராவது தவறா தொட்டா இதை மட்டும் செய்... வேலூர் கலெக்டர் போட்ட லெட்டர், பரபரப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 14, 2019, 1:34 PM IST
Highlights

 யாரேனும் உங்களிடம் பாலியல் நோக்கத்தோடு தொட முயற்சித்தால்,  அவர்களை தொட விடாதே.  எதிர்த்து நில்.  சத்தமாக கூச்சலிட்டு.  உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடு... உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் உடனடியாக சொல்லிவிடு,  உங்களுக்கு உதவி செய்ய தயார் தயாராக உள்ள நம்முடைய 24 மணி நேர இலவச தொலைபேசி எண் சைல்டு லைன் 1098 மூலம் கூறி உதவிகேள்.  இதன் மூலம் உனது பாதுகாப்பு உறுதி செய்யப்படும், 

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் முழு விவரம்:-  நமது வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைச் செல்வங்கள் ஆகிய உங்களுடன் நேரில் பேசிட எனக்கு ஆவலாக உள்ளது.  ஆனால் அதற்கான கால அவகாசம் இல்லாத காரணத்தினால் இக்கடிதம் மூலம் உங்களுடன் பேசுவதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.  குழந்தைகள் என்றாலே 0 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் .  மேலும் மகிழ்ச்சி குதுகலம் கொண்டாட்டமாக இருக்க படவேண்டியவர்கள் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை வளர்ச்சிக்கான உரிமை பாதுகாப்புக்கான உரிமை மற்றும் பங்கேற்பதற்கான உரிமைகள் உள்ளன. 

 நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினமான இன்று அனைத்து குழந்தைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்,  இத்தினத்தில் ஒவ்வொரு குழந்தையும் அவரவர் ஆரோக்கியம் விளையாட்டு கல்வி ஆகிய முன்னேற்றங்களுடன் சமூக செயல்பாடுகளில் அக்கறை காட்டி மாற்றம் தரும் மாமனிதர்களாக மாற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  உங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கிய  அடிக்கல் என்பதால்,  இது குறித்து உங்களுக்கு நீங்கள் மற்றவர்களுக்கு  உதவிடும் வகையில் சில ஆலோசனைகளைக் கூற உள்ளேன்.  யாரேனும் உங்களிடம் பாலியல் நோக்கத்தோடு தொட முயற்சித்தால்,  அவர்களை தொட விடாதே.  எதிர்த்து நில்.  சத்தமாக கூச்சலிட்டு.  உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடு...

உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் உடனடியாக சொல்லிவிடு,  உங்களுக்கு உதவி செய்ய தயார் தயாராக உள்ள நம்முடைய 24 மணி நேர இலவச தொலைபேசி எண் சைல்டு லைன் 1098 மூலம் கூறி உதவிகேள்.  இதன் மூலம் உனது பாதுகாப்பு உறுதி செய்யப்படும்,  குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் நம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுத்தல் பற்றிய  விவரங்களைத் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும் .  இதன்படி 18 வயது பூர்த்தியடையாத பெண் குழந்தைக்கும் 21 வயது பூர்த்தியடையாத ஆணுக்கும் திருமணம் நடத்தி வைப்பது திருமண ஏற்பாடு செய்வது வற்புறுத்துவது போன்ற செயல்கள் குழந்தை திருமணம் என்றும் தண்டனைக்குரிய செயல் ஆகும். இதை  குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் 2006 வலியுறுத்துகிறது.  எனவே இதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள சைல்டு லைன் 1098 அழைத்து உதவி கேளுங்கள்.  மேலும் குழந்தைத் தொழிலாளர்கள் ,  ஆதரவற்ற குழந்தைகள்,  பிச்சை எடுக்கும் குழந்தைகள்,  கொடுமைக்கு இரையாகும் குழந்தைகள்,  வீட்டை விட்டு ஓடிப்போகும் குழந்தைகள்,  காணாமல் போகும் குழந்தைகள்,  பள்ளி செல்ல மற்றும்  பள்ளி இடைநின்ற குழந்தைகள்  கடத்தப்படுகின்ற குழந்தைகள்,  மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள்.  போன்ற பிரச்சினைகளில் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவிட சைல்டு லைன் 1098 என்ற எண்ணை அழைக்கவும் நம்ம வட்டத்தில் உங்களுக்காக உதவி செய்ய நானும் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அலுவலர்கள் இருக்கின்றோம். 

 உங்களுக்காக உதவும் மாவட்ட அலுவலர்கள் சிலரின் தொலைபேசி எண்களை பதிவிட்டுள்ளேன், உதவி தேவைப்படும் போது இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  மேலும் நமது மாவட்டத்தை  குழந்தை நேயமிக்க மாவட்டமாக மாற்றிட அனைவரும் ஒன்றிணைவோம். நல்வாழ்த்துக்கள்,  இப்படிக்கு  சண்முகசுந்தரம் இந்திய ஆட்சிப் பணி மாவட்ட ஆட்சித் தலைவர் வேலூர் மாவட்டம் என குறிப்பிட்டுள்ள அவர்,  மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ்அப்  எண்,  சைல்டு லைன் இலவச தொலைபேசி எண்,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எண்,  உள்ளிட்ட எண்களை தனது கடிதத்தில் பதிவிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது. 

click me!