சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3,454 பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சாதாரண கட்டண பேருந்துகள் 1,559, விரைவு மற்றும் சொகுசு பேருந்துகள் 1,674, ஏசி பேருந்துகள் 48, மினி பேருந்துகள் 207 உள்ளிட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை மாநகர பேருந்துகளில் யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக குரோம்பேட்டை பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளில் யுபிஐ மூலம் டிக்கெட் வழங்கப்படுகிறது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3,454 பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சாதாரண கட்டண பேருந்துகள் 1,559, விரைவு மற்றும் சொகுசு பேருந்துகள் 1,674, ஏசி பேருந்துகள் 48, மினி பேருந்துகள் 207 உள்ளிட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த மாநகர பேருந்தால் தினமும் 25 முதல் 30 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க;- TNPSC Exam Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எப்போது தெரியுமா? வெளியான அறிவிப்பு.. காலியிடங்கள் எத்தனை?
இந்நிலையில், மாநகரப் பேருந்துகளில் சில்லறை தட்டுப்பாடால் நடத்துனர் மற்றும் போக்குவரத்து பயணிகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இதனால், யுபிஐ மற்றும் க்யூஆர் கோடு மூலம் தமிழக அரசுப் பேருந்துகளில் பயணச்சீட்டு பெறும் முறை அமல்படுத்தப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால், இதனை அரசு பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் தற்போது சென்னை மாநகரப் பேருந்துகளில் யுபிஐ மூலம் பணம் செல்லும் நடைமுறை அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- தென் மாவட்டங்களுக்கு பஸ்ஸில் போறீங்களா.?இனி கோயம்பேடுக்கு போகாதிங்க...கிளாம்பாக்கத்திற்கே செல்லுங்க-விவரம் இதோ
இந்நிலையில், முதற்கட்டமாக சென்னை பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளின் நடத்துநர்களுக்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தி சீட்டு வழங்கும் வகையிலான புதிய கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவியில், பயணிகள் ஏறுமிடத்தையும், இறங்கும் இடத்தையும் தேர்வு செய்து சீட்டு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் படிப்படியாக மற்ற பணிமனைகளுக்கு விரிவு செய்யப்பட உள்ளது.