முதல்வர் ஸ்டாலின் சீக்கிரம் குணமடையணும்! தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

Published : Jul 24, 2025, 06:43 PM IST
Tamilnadu Politics

சுருக்கம்

முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். 

TVK Vijay Wishes CM Stalin Speedy Recovery: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். தலைசுற்றல் பிரச்சனை காரணாமக கடந்த 2 நாட்களாக மருத்துவமனையில் இருக்கும் ஸ்டாலினுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின்

''முதலமைச்சர் அவர்களுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில், இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதய சிகிச்சை மருத்துவர் Dr.G.செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது.

பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதலமைச்சர் அவர்கள் நலமாக உள்ளார்கள். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்கள்'' என்று அப்பல்லோ மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டு இருந்தது. பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உடல்நலன் விசாரித்தனர்.

மருத்துவமனையில் இருந்தபடி அரசு பணிகள்

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய விருப்பம் தெரிவித்து இருந்தார். மருத்துவமனையில் ஓய்வில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்தபடியே அரசு பணிகளை கவனித்து வருகிறார். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் பயனாளிகளுடன் மருத்துவமனையில் இருந்தபடியே முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். ''மருத்துவமனையில் இருந்தபடியே உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன். மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

முதல்வர் குணமடைய விஜய் வாழ்த்து

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என நடிகரும், தவெக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ''மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன்'' என்று கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 நாட்களுக்கு மேலான நிலையில் விஜய் அவர் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதான் அரசியல் மாண்பு

2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இளைஞர்களின் வாக்குகளை குறிவைத்துள்ள விஜய், திமுகவையும், பாஜகவும் விளாசித் தள்ளி வருகின்றனர். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என அறைகூவல் விடுத்து வருகிறார். இந்நிலையில், அரசியல் வேறு, தனிநபர் மாண்பு வேறு என்பதை நிரூபிருக்கும் வகையில் ஸ்டாலினுக்கு விஜய் வாழ்த்து கூறியுள்ளது பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!