சென்னையில் நள்ளிரவில் பயங்கர சத்தம்.. அலறியடித்து எழுந்த பொதுமக்கள்.. நடந்தது என்ன?

Published : May 18, 2023, 09:08 AM IST
சென்னையில் நள்ளிரவில் பயங்கர சத்தம்.. அலறியடித்து எழுந்த பொதுமக்கள்.. நடந்தது என்ன?

சுருக்கம்

சென்னை தேனாம்பேட்டை பி.பி. கோயில் தெரு அருகே உள்ள பாபு தெருவில் டிரான்ஸ்பார்மர் செயல்பட்டு வருகிறது. 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிரான்ஸ்பார்மர் நள்ளிரவில் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தேனாம்பேட்டை பி.பி. கோயில் தெரு அருகே உள்ள பாபு தெருவில் டிரான்ஸ்பார்மர் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது நள்ளிரவில் திடீரென பயங்கர சத்தத்துடன் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பிடித்தது. இதனால், என்னாச்சோ ஏதாச்சோ அலறியடித்துக் கொண்டு எழுந்து பொதுமக்கள் வெளியே ஓடிவந்தனர். 

அப்போது, டிரான்ஸ்பார்மரில் தீப்பற்றி எரிந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள்  தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால், நள்ளிரவில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!