சென்னையில் அதிர்ச்சி.. கடலில் குளிக்க சென்றபோது ராட்சத அலையில் சிக்கி 2 மாணவர்கள் பலி..!

Published : May 17, 2023, 03:46 PM IST
சென்னையில் அதிர்ச்சி.. கடலில் குளிக்க சென்றபோது ராட்சத அலையில் சிக்கி 2 மாணவர்கள் பலி..!

சுருக்கம்

சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (20). பொன்னேரியில் உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்துவந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் 10-ம் வகுப்பு படித்து வந்த ஹரிஷ் (16) மற்றும் இவரது நண்பர்கள் 4 பேர் உள்ளிட்ட 6 பேர் சுந்தரபுரம் கடற்கரையில் குளித்துள்ளனர். 

சென்னையில் கடலில் குளித்த மாணவர்களில் இரண்டு பேர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (20). பொன்னேரியில் உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்துவந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் 10-ம் வகுப்பு படித்து வந்த ஹரிஷ் (16) மற்றும் இவரது நண்பர்கள் 4 பேர் உள்ளிட்ட 6 பேர் சுந்தரபுரம் கடற்கரையில் குளித்துள்ளனர். மாணவர்கள் குளித்துக் கொண்டு இருந்தபோது, திடீரென எழுந்து வந்த ராட்சத அலையில் சிக்கி சந்துரு, ஸ்ரீகாந்த், ஹரீஷ் மூவரையும் இழுத்து சென்றது. 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அங்கு குளித்துக் கொண்டு இருந்த அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கடலோர காவல் படை வீரர்களின் உதவியுடன் அலையில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 

பின்னர், அவர்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஹரிஷ், ஸ்ரீகாந்த் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான மற்றொரு மாணவன் சந்துருவை தேடி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!