பணியின் போது திடீர் மாரடைப்பு... சுருண்டு விழுந்து உயிரிழந்த இளம் காவலர்..!

By vinoth kumarFirst Published Apr 9, 2020, 8:10 AM IST
Highlights

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள வடுவூர் புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (33) இவர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குமாரராஜா சாலையில் தங்கியிருக்கிறார். இங்கிருந்து, மயிலாப்பூர் போக்குவரத்து பிரிவில் கடந்த 2018ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம்போல எஸ்சிபி ரோடு, சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். 

சென்னை மயிலாப்பூரில் போக்குவரத்து காவலர் ஒருவர் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக, இந்தியா முழுவதும் 21நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியில் வரலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மற்ற நேரங்களில் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் வாகனங்களில் சுற்றக்கூடாது என்றும் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியிலும், சோதனை சாவடிகள் அமைத்தும் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகிறார்கள். மீறி வருபவர்களுக்கு கடுமையாக தண்டனையும் கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள வடுவூர் புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (33) இவர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குமாரராஜா சாலையில் தங்கியிருக்கிறார். இங்கிருந்து, மயிலாப்பூர் போக்குவரத்து பிரிவில் கடந்த 2018ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம்போல எஸ்சிபி ரோடு, சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். 

அப்போது,மாலை 3.15 மணி அளவில் திடீரென மாரடைப்பு மயங்கி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்த காவலர்கள் போலீஸ் வாகனம் மூலம் அரசு ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்த விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணியின் போது போக்குவரத்து காவலர் உயரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!