கொரோனா பீதியிலும் 14 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்... டிஜிபி திரிபாதி அதிரடி.. !

Published : Apr 08, 2020, 05:44 PM ISTUpdated : Apr 08, 2020, 05:49 PM IST
கொரோனா பீதியிலும் 14 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்...  டிஜிபி திரிபாதி அதிரடி.. !

சுருக்கம்

கொரோனா பீதியிலும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 14 டிஎஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்படுவதாக  டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா பீதியிலும் சென்னை உட்பட தமிழகம் முழுதும் 14 டிஎஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்படுவதாக  டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முழு விவரங்கள்

* சென்னை பரங்கிமலை உதவி ஆணையர் சங்கரநாராயணன் மாநில குற்ற ஆவண காப்பகத்துக்கு டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

* சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி ஜீவானந்தம் பரங்கிமலை  உதவி ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

* எம்கேபிநகர் உதவி ஆணையர் முத்துக்குமார் புழல் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். 

* சென்னை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையர் ஹரிகுமார் எம்கேபி நகர் உதவி ஆணையராக பணியிட மாற்றப்பட்டுள்ளார்.

* சென்னை,மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் அசோகன், எழும்பூர் சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

* பூக்கடை உதவி ஆணையர் லட்சுமணன், சென்னை காவல் ஆணையர் அலுவலக நவீன கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

* திருப்பூர் மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பி தனராசு, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

* மாநில மனித உரிமை ஆணைய டிஎஸ்பி பாலகிருஷ்ண பிரபு, பூக்கடை உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

* தமிழ்நாடு கமாண்டோ பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், மாநில மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

* விழுப்புரம், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பி விஜயராமன், தமிழ்நாடு கமாண்டோ படை, சென்னை டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

* கோயம்புத்தூர் சரக பயிற்சி மைய டிஎஸ்பி நாகராஜன், சேலம் நகர மேற்கு சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

* சேலம் மேற்கு சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் செல்வராஜ், சேலம் நுண்ணறிவுப் பிரிவு (சிசிஐடபில்யூ) டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

* சீருடைப் பணியாளர் தேர்வாணைய சென்னை டிஎஸ்பி ஜரீனா பேகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு, சென்னை டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

* சிபிசிஐடி, சென்னை டிஎஸ்பி சிவனுபாண்டியன், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய சென்னை, டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா? விஜய் அரசின் அடுத்த பிளான் என்ன?