சென்னையில் முக்கிய சாலைகளில் ஒன்றாக ராஜூவ்காந்தி சாலை இருந்து வருகிறது. இந்த பகுதியில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். தற்போது அங்கு மெட்ரோ பணிகள் நடந்து வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் இன்று முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் முக்கிய சாலைகளில் ஒன்றாக ராஜூவ்காந்தி சாலை இருந்து வருகிறது. இந்த பகுதியில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். தற்போது அங்கு மெட்ரோ பணிகள் நடந்து வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னை ஓஎம்ஆர் சாலையில் வாகனங்கள் எளிதாக செல்வதற்கு வசதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- சோழிங்கநல்லூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படுகின்றன.
காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வரும் வாகனங்கள் பிஎஸ்ஆர் மால் அருகே இடதுபுறம் (ராஜீவ் காந்தி சாலையில்) திருப்பிவிடப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய யு டர்ன் மூலம் சோழிங்கநல்லூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.
- Traffic Diversion at OMR Road
Thuraipakkam
From 16.12.2023, on trial basis. pic.twitter.com/kwxb2eBhGB
இதையும் படிங்க;- 3 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பிச்சு உதற போகுதாம் மழை.. வானிலை மையம் அலர்ட் மெசேஜ்.!
இதேபோல், மாநகராட்சி சாலையில் இருந்து துரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையில் இடதுபுறம் திருப்பப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய யு டர்னில் சென்று துரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும். வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று போக்குவரத்துக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.