சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர்களால் முன்மொழியப்பட்ட பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தரமணி மற்றும் துரைப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் காரணமாக OMR சாலையில் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர்களால் முன்மொழியப்பட்ட பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தரமணி மற்றும் துரைப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உள்ளதால் இப்பணிகளைக் கருத்தில் கொண்டு, பின்வரும் சாலைகளில் போக்குவரத்து மாற்றமானது வருகின்ற 16.03.2024 முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
இதையும் படிங்க: அதிமுக கொடி, சின்னம் வழக்கு! பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்! தடை நீக்கப்படுமா? தீர்ப்புக்கு நாள் குறித்த ஐகோர்ட்.!
* வேளச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் அப்பல்லோ சந்திப்பில் வலது புறம் திரும்பி துரைப்பாக்கம் நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் நேராக சென்று துர்யா ஹோட்டல் முன் “யு” டர்ன் செய்து துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூருக்குச் செல்லலாம்.
இதையும் படிங்க: Tamilnadu Rain: வானிலை மையம் சொன்ன குட்நியூஸ்.. மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த இடங்களில் தெரியுமா?
* அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் அப்பல்லோ சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வேளச்சேரி நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் மேலும் நேராக சென்று உலக வர்த்தக மையத்தின் முன் “யு” டர்ன் செய்து அப்பல்லோ சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி வேளச்சேரியை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.