அண்ணாசாலையில் வாகனங்கள் எளிதாக செல்ல வேண்டிய கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இன்று முதல் சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது.
இன்று முதல் சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- அண்ணாசாலையில் வாகனங்கள் எளிதாக செல்ல வேண்டிய கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இன்று முதல் சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது.
undefined
1. ஸ்மித் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. அண்ணாசாலை X ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து ஓயிட்ஸ் சாலை செல்லலாம். ஒயிட்ஸ் சாலை ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்ல அனுமதி இல்லை.
2. பட்டுள்ளாஸ் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. ஒயிட்ஸ் சாலை x பட்டுள்ளாஸ் சாலை சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்லலாம். அண்ணா சாலை X பட்டுள்ளாஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்ல அனுமதி இல்லை.
3. ஜி.பி.ரோடு சந்திப்பு மற்றும் பின்னி சாலையில் இருந்து அண்ணாசாலை வந்து ஓயிட்ஸ் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக ஸ்மித் ரோடு சந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி ஸ்மித் ரோடு, ஒயிட்ஸ் ரோடு சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
4. இராயப்பேட்டை மணிகூண்டு சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் ரோட்டில் வந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி பட்டுல்லாஸ் சாலை, அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். ஸ்மித் ரோடு வழியாக செல்ல அனுமதி இல்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
5. திரு.வி.க. x ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து ஓயிட்ஸ் ரோட்டில் வத்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்மித் ரோடு வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக பட்டுல்லாஸ் சாலை சந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி பட்டுல்லாஸ் சாலை, அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
6. அண்ணாசாலை X பட்டுள்ளாஸ் சாலை சந்திப்பில் இருந்து பின்னிசாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி அண்ணாசாலையில் ஸ்பென்சர் எதிர்புறம் உள்ளே U வளைவில் திரும்பி பின்னிசாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லலாம். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.